August 12, 2022

தஞ்சையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சையில் கள்ளச்சந்தை விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக முதியவர் ஒருவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கள்ளச்சந்தையில் அதிகளவில் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுகிறது என்று குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் கீழவாசல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அப்பகுதியில் உள்ள மாவு மில் அருகே 10 மூட்டைகளில் தலா 50 கிலோ என 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்து பாரதி நகரைச் சேர்ந்த கெளரி சங்கர் (69) என்பவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!