October 2, 2022

மதுபானம் பற்றி முதல்வருக்கு தெளிவு இல்லை – அண்ணாமலை

சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க சர்வாதிகார மாறுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். போதைப் பொருளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்று தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். இதுபோன்ற ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு விளக்கத்தைத் தான் நான் தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.

போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் இத்தனை விரிவாக இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்வர் அவர்கள் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால் போதைப் பழக்கத்தின் தீமைகளை பற்றி தெளிவாக அறிந்த நம் முதல்வருக்கு மதுபானம் தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

அரசு தானாக முன்வந்து மதுக்கடைகளை மூடினால், தமிழகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் நிம்மதி அடைவார்கள். குற்றங்கள் குறையும். குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லை, குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். குடும்பங்களைப், பெண்களை நிம்மதியாக வாழ வைக்கும் வகையில், தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை எடுக்கும்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!