August 12, 2022

கேரளாவில் 5ஜி சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

திருவனந்தபுரம் : கேரள சட்டசபையில் இன்று நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஐ-பேட் மூலம் பாலகோபால் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததன்மூலம், முதல் காகிதமில்லா பட்ஜெட் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்டவில்லை. தகவல் தொழில்நுட்பம், தொழில்துறைகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே-ரெயில் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மீனவர்கள் மற்றும் பட்டியலின சமூகங்கள் உள்ளிட்ட விளிம்புநிலைப் பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும். பொது விநியோகத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.2,063.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 5ஜி சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!