September 29, 2022

இந்தியா – லீசெஸ்டர்ஷைர் இடையேயான போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிப்பு

லீசெஸ்டர் : கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்துக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சென்றுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. இதில் இந்திய வீரர்கள் ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர், களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் எடுத்தார்.

நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!