லக்னோ ஐஐடியை சேர்ந்த மாணவருக்கு அமேசானில் கிடைக்கும் வருட சம்பளம்

சென்னை: லக்னோ ஐஐடியை சேர்ந்த மாணவர் ஒருவர் அமேசானில் மிகப்பெரிய சம்பள பேக்கேஜுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிக சம்பளம் பெறுவது என்பது வேலை தேடும் ஒவ்வொரு நபருக்கும் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். அந்த வகையில் சமீபத்தில் லக்னோ ஐஐடியை சேர்ந்த மாணவர் ஒருவர் அமேசானில் மிகப்பெரிய சம்பள பேக்கேஜுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..
அபிஜீத் திவேதி என்ற லக்னோ ஐஐடியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வருகிறார். அவர் தற்போது அயர்லாந்தின் அமேசான் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு மிக உயர்ந்த ஆண்டு சம்பளம் ரூ 1.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து அபிஜீத் கூறுகையில், ” சாப்ட் ஸ்கில்ஸ் மிகவும் முக்கியம், எனவே பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவு மட்டுமே தேவை என்று நினைக்க வேண்டாம். தொடர்பு திறன் மற்றும் உடல் மொழி ஆகியவை சமமாக முக்கியம். வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள சீனியர்களுடன் தொடர்பில் இருப்பது மற்றும் நேர்காணல்களில் வெற்றிபெற அவர்களிடமிருந்து உதவிக்குறிப்புகளைப் பெறுவது போன்ற இணைப்புகளை உருவாக்குங்கள்.
சமீபத்திய வேலை வாய்ப்புகளுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் பிரபலமான வேலைவாய்ப்பு இணையதளங்களில் சுயவிவரங்களை உருவாக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..
ஐஐடி மாணவர்கள் எப்போதும் சாதனை படைக்கும் சம்பளப் பேக்கேஜ்களைப் பெறுவதில் பெயர் பெற்றவர்கள், அந்த வகையில் அபிஜீத்தின் பேக்கேஜ் என்பது ஐஐடி-மாணவர்களின் மற்றொரு வெற்றிக் கதை என்பது குறிப்பிடத்தக்கது.