December 8, 2022

பி.எப்.ஐ. அமைப்பு தொடர்பான வழக்கு….புதிய நீதிபதி நியமனம்….

புதுடெல்லி : பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட செயல்களுக்கு ஆட்களை சேர்த்தல், பயிற்சி அளித்தல் ஆகிய புகாரின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்க இயக்குனரகமும் இணைந்து நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ அமைப்புகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

இதையடுத்து, நாடு முழுவதும் இவ்அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அறிவித்தது.

நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்புகள் மீது 1400க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி போலீசார் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் யுபிஏ கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அங்குள்ள ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த அமைப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, பி.எப்.ஐ., ‘யு.பி.ஏ.,’தீர்ப்பாய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மாவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் யுபிஏ  தீர்ப்பாய அதிகாரியாக மத்திய அரசு நியமித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!