December 10, 2022

ஆசிய கோப்பை : இந்தியா – மலேசியா இன்று பலப்பரிச்சை…

வங்கதேசம் : 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு போட்டிகள் உள்ளன. காலை பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதின.

அதில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது . இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மலேசியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மலேசியா தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்க கடுமையாகப் போராடும். அதே சமயம் வெற்றிப் பயணத்தை தொடர இந்திய அணி உறுதியாக உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்  வென்ற மலேசியா மகளிர் அணி முதலில் இந்திய அணியை பேட் செய்யும்மாறு கேட்டுக்கொண்டது இந்திய மகளிர் அணி 4 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது.பின்னர் ஆடிய மலேசியா மகளிர் அணி 16/2 என்ற ரன் கணக்கில் ஆடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!