August 20, 2022

விமான எரிபொருள் விலை உச்சத்தை தொட்டது

புதுடில்லி: அதிகளவு உயர்ந்தது… விமான எரிபொருள் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்ததை அடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர், அதாவது ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 666 ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் தொடர்ந்து 6வது முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை மொத்தம் 36 ஆயிரத்து 643 ரூபாய் அதிகரிக்கப்பட்டுளளது. ஒவ்வொரு மாதத்திலும் ஒன்றாம் தேதி மற்றும் 16 ஆம் தேதியில் விமான எரிபொருள் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!