October 5, 2022

தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுப்பு தெரிவித்தது குறித்து பா.சிதம்பரம் கருத்து

டெல்லி : சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக அறிக்கையை சமர்பித்தார். 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்ட குழுவை சோனியா நியமித்தார். அதோடு பிரசாந்த் கிஷோரையும் காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு இறுதிக்கட்ட ஆலோசனையும் நடத்தியது. ஆனால் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுத்துவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பேட்டி அளித்தபோது கூறுகையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸிடம் அளித்தது மிக முக்கியமான தரவுகள். இவை அனைத்தும் பிரமிக்கவைக்கக்கூடிய முக்கிய தரவுகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அவருடைய அறிக்கையில் குறிப்பிட்ட சில அம்சங்களை செயல்படுத்தவேண்டும் என நாங்களும் கருதுகிறோம். ஆனால் அவர் கட்சி தலைமை குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை.பிரசாந்த் கிஷோர் ஆலோசகராகவே கட்சிக்கு செயல்பட விரும்புகிறார். அவர் ஏற்கனவே தெலுங்கானா ராஷ்டிரா சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ஜகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்படுகிறார். அவர் காங்கிரஸில் இணைந்தால் இந்த கட்சிகளுடனான உறவு பாதிக்கப்படும். மேலும் ஐபேக் அமைப்புடனான அவர் உறவையும் அவர் வரையறுக்க வேண்டியது வரும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!