வாராக்கடன்களை வசூலிக்க அமைக்கப்பட்ட பேட் பேங்க் செயல்பாட்டுக்கு வந்தது

புதுடில்லி: செயல்பாட்டுக்கு வந்த பேட் பேங்க்…பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்களை வசூலிக்க அமைக்கப்பட்ட பேட் பேங்க் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 38 வங்கிக் கணக்குகள் மூலமாக வாராக்கடன் தொகை 82 ஆயிரத்து 845 கோடி ரூபாயாக உள்ளது.
இதில் 15 கணக்குகளில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகை வங்கிகளுக்கு வர வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, வங்கிகளின் வாராக்கடன்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பத்து கோடிக்கு மேல் வாராக் கடன் உடையவர்களின் சொத்துகளைக் கையகப்படுத்தவும் கடன் நிலுவைக்குத் தீர்வு காணவும் பேட் பேங்க் அறிவிக்கப்பட்டது.