August 16, 2022

அமெரிக்க வான்வெளியை ரஷிய விமானங்கள் பயன்படுத்த தடை விதிப்பு

வாஷிங்டன் : உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றியபோ, உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்ற உள்ளார். அதில் தங்கள் நாட்டு வான்வெளியில் இனி ரஷிய விமானங்கள் பறக்க கூடாது என ஜோ பைடன் உத்தரவிட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!