September 27, 2022

ரூ.7 கோடிக்கு ஏலத்தில் டூபிளசியை தட்டித் தூக்கிய பெங்களூர் அணி

மும்பை: தட்டுத் தூக்கிய பெங்களூர் அணி… கடந்த தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்த டூபிளசியை இந்த முறை பெங்களூர் அணி கடுமையான போட்டிக்கு பிறகு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. லக்னோ மற்றும் அஹமதாபாத் ஆகிய இரு அணிகள் இந்த தொடரில் கூடுதலாக இணைந்துள்ளது.

அதே போல் கடந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய ஐபிஎல் மெகா ஏலம் கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில், மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் (12ம் தேதி) நாளையும் (13ம் தேதி) நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவரான டூபிளசியை, பெங்களூர் அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்த டூபிளசியை மீண்டும் அணியில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முயற்சித்தது. ஆனால் பெங்களூர் அணி சிறிதும் தயங்காமல் ஒரே முடிவுடன் டூபிளசியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!