May 21, 2022

பிக்பாஸ் 5 பிரபலம் சந்தித்த பிக்பாஸ் 1 பிரபல நடிகை

சென்னை: பிக்பாஸ் 5ல் பங்கேற்ற நடிகர் வருண் நடிகையும், பிக்பாஸ் சீசன் 1 பிரபலமுமான நடிகை ஓவியாவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று ரூ.50 லட்சத்தை தட்டிச்சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் வருண். இவருடைய தாத்தா பழம்பெரும் நடிகர் ஐசரி வேலன் மற்றும் இவரது மாமா பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ். இந்த நிலையில் ஹீரோவாக பல பயிற்சிகளை மேற்கொண்ட வருண் தற்போது ஜோஸ்வா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதன் ட்ரெய்லர் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் வெளியிடப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வருண் பிரபலங்கள் பலரையும் சந்தித்துள்ளார். அந்த வகையில் அவர் அண்மையில் நடிகையும், பிக்பாஸ் சீசன் 1 பிரபலமுமான நடிகை ஓவியாவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!