September 27, 2022

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க ஆவலுடன் உள்ளேன் – பீகார் முதல்வர்

பீகார் : பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில்,வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பாட்னாவில் இதுகுறித்து நிதிஷ்குமார் பேட்டி அளிக்கையில், பிரதமர் பதவி மீது ஆசையில்லை. பீகார் மக்களுக்கு மட்டும் சேவையாற்றவே விரும்புகிறேன். எனினும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க, எனது பங்களிப்பதை செலுத்த ஆவலுடன் உள்ளேன்.

இதுகுறித்து என்னை பல தலைவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். வரும் நாட்களில் இதற்கான நடவடிக்கைகளை பார்க்கலாம். பீகாரில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு புதிய ஆட்சியைப் அமைத்துள்ள மெகா கூட்டணிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் மக்கள் அதற்கு பதில் அளிப்பார்கள். துணை ஜனாதிபதி பதவி மீது ஆசையே இல்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!