உக்ரைன் போர் குறித்து பிரிட்டன் பிரதமர் விமர்சனம்

பிரிட்டன்: நச்சுமிக்க ஆண்மைக்கான உதாரணம்… ரஷ்ய அதிபர் புதின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், புதின் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நச்சுமிக்க ஆண்மைக்கான உதாரணம் என்றும் அவர் கூறினார்.