வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றும்(மே 21), நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றும்(மே 21), நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23 முதல் 25 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 37 மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.