November 29, 2022

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் லேசான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் அதை ஒட்டிய தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி வரைக்கும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், கொங்கன்-கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கையும், மும்பை, புனே, சதாரா, கோலாப்பூர், நாசிக், விதர்பா மற்றும் மராத்வாடா போன்ற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் தண்ணீர் தேங்கி சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிக அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும், கடல் அலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!