October 2, 2022

முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு கிடைத்த அதிர்ச்சி

மும்பை: முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சியை கொடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவருடன் மறுமுனையில் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் கான்வேயும் 3 ரன்களில் அவுட் ஆகினார்.

எனினும், ஓரளவு அதிரடி காட்டிய ராபின் உத்தப்பா 28 ரன்கள் சேர்த்த நிலையில் வருண்சக்கரவர்த்தி சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். 15 ரன்கள் சேர்த்த அம்பத்தி ராயுடு ரன் அவுட் ஆனார். பிறகு வந்த ஷிவம் துபே 3 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 7 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டோனி, துவக்கத்தில் நிதானம் காட்டினார். அவருடன் இணைந்த ஆடி வந்த கேப்டன் ஜடேஜாவும் நிதானத்தை கடைபிடித்தார். இதனால் சென்னை அணியின் ரன் ரேட் நத்தை வேகத்தில் நகர்ந்தது.

18வது ஓவரில் அதிரடியை தொடங்கிய தோனி ஆட்டத்தின் இறுதிவரை அதை தொடர்ந்தார். அவர் 38 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களை சேர்த்தார். கேப்டன் ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 132 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்க கிடைத்தது. அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தாலும், களமாடிய வீரர்கள் மட்டையை சுழற்றியதால் ரன்கள் வந்து சேர்ந்தன. இதனால் அந்த அணி 18.3 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. மேலும் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹானே 44 ரன்களை சேர்த்தார். சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!