September 27, 2022

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி இல்லத்தில் விருந்தளிப்பு

டெல்லி : இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் இறுதி விழாவில், இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர்.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நாளை விருந்தளிக்க உள்ளார்.

பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு பதக்கம் வென்ற வீரர்களை சந்திக்கிறார். காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரின் பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!