May 21, 2022

10 ஆண்டுகளுக்கு பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த முயற்சித்த அரசுக்கு பாராட்டுக்கள் – முத்தரசன்

நெல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் இன்று பேட்டி அளித்தபோது, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த முயற்சித்த அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள்.

தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். மதசார்பற்ற கொள்கையில் தி.மு.க. உறுதியுடன் உள்ளது. மாநில உரிமைகளுக்காக போராடி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு அனைத்து அதிகாரமும், எங்களுக்கே என நினைப்பது உரிமைமீறல் ஆகும். இதுநாட்டின் ஒருமைப் பாட்டை சீர்குலைக்கும். இந்தியா சொந்தகாலில் நிற்க நேரு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக் கினார். ஆனால் மோடி அரசு அவற்றை விற்று வருகிறது. மதச்சார்பற்ற தன்மை, அரசியல் அமைப்பை காக்க வருகிற 23,24-ந் தேதிகளில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!