ரஷியாவில் ஒரே நாளில் 98 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாஸ்கோ : கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்தன. கொரோனாவுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை உருவாக்கிய நாடு ரஷியா.
ஆனால், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடுகிறது. நேற்று ஒரு நாளில் அங்கு 98 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அங்கு இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்கூறுகையில், இந்த எண்ணிக்கை அதிகமாகவும், ஒரு வேளை மிக அதிகமாகவும் உள்ளது என்பது வெளிப்படையானது. ஏனெனில் நிறைய பேர் பரிசோதனை செய்துகொள்வதில்லை. அவர்களுக்கு அறிகுறியும் இல்லை. அதே நேரத்தில் பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான் என்று கூறினார்.