September 27, 2022

ஐக்கிய அரபு நாட்டில் வேகமாக நிரம்பி வரும் அணைகள்

துபாய் : வளைகுடா நாடுகளில் பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். அதே நேரம் மழை காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கனமழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும்.

இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

அங்கு, அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணைகளுக்கு மேலும் நீர் வர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐக்கிய அரபு நாட்டில் உள்ள வுராயா, ஷவ்கா, புராக், சிப்னி, அல்அஜிலி, அஸ்வானி, மம்தூஹ் ஆகிய 7 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!