December 10, 2022

டெல்லியில் 5 ஆயிரம் மரங்களை வெட்ட முடிவு

டெல்லி : டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சாகரன்பூருக்கு பாரத்மாலா திட்டத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைப்பணியை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலை 14.7 கி.மீ. நீளமுள்ளது. இந்த சாலைக்காக, சுமார் 10 ஹெக்டேர் வனப்பகுதி தேவைப்படுகிறது. இந்த பகுதியில் வேம்பு, அசோகா, நாவல் மற்றும் யூகலிப்டஸ் போன்ற மரங்கள் உள்ளன. சாலைப்பணிக்காக இந்த வனப்பகுதி மரங்கள் உள்பட மொத்தம் 5,104 மரங்களை வெட்ட வேண்டி இருக்கிறது.

இதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், இழக்கப்படும் மரங்களுக்கு ஈடாக பதர்பூர் சுற்றுச்சூழல் பூங்காவில் ரூ.8.66 கோடி செலவில் கூடுதல் மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!