September 27, 2022

நாட்டின் ஜனநாயகம் மூச்சு திணறுகிறது – ப.சிதம்பரம்

டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பேட்டி அளித்தபோது, இந்தியாவில் ஜனநாயக நிறுவனங்கள் அடக்கப்பட்டு இருக்கின்றன அல்லது ஏமாற்றப்பட்டு உள்ளன அல்லது கைப்பற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களுக்கும் இதுதான் நிலைமை. நாட்டின் ஜனநாயகம் மூச்சு திணறுகிறது. இதைத்தான் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் இருந்து அவரை பாதுகாக்க அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தவறிவிட்டார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த வகையில் பாராளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வருத்தத்துடன் வந்திருக்கிறேன்.

விலைவாசியை குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைக்க நிதி மந்திரி கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் செய்யவில்லை. பணவீக்கம் அதிகரிப்பு பிரச்சினையில் அதிக தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட அமெரிக்காவுடன், குறைந்த தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட இந்தியாவை நிதி மந்திரி ஒப்பிடுவது கேவலமானது என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!