October 5, 2022

தமிழக பட்ஜெட்டில் அமைந்துள்ள நிதி ஒதுக்கீடு விபரங்கள்

சென்னை: தமிழக பட்ஜெட்டில் அமைந்துள்ள நிதி ஒதுக்கீடுகள் பற்றிய விபரம்.

பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7400 கோடி ஒதுக்கீடு. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு. சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு. கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி ஒதுக்கீடு. பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7500 கோடி ஒதுக்கீடு. காவல்துறைக்கு ரூ.10,285 கோடி.

வட்டியில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு. எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு. சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி ஒதுக்கீடு. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். இதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புத்தக வாசிப்பை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா என்ற பெயரில் ரூ.5.6 கோடியில் புத்தக காட்சி நடத்தப்படும். வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.

தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு. இவ்வாறு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!