September 27, 2022

படப்பிடிப்பு பிளானில் திடீர் மாற்றம் செய்த இயக்குனர் பாலா

சென்னை: படப்பிடிப்பு பிளானில் திடீர் மாற்றம் செய்துள்ளார் இயக்குனர் பாலா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் புதிய மாற்றத்தை பாலா செய்துள்ளராம்.

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அதேபோன்று மலையாள நடிகை மமிதா பைய்ஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரியில் கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு 41 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதில் முட்டம் அருகே நடைபெற்ற படப்பிடிப்பின் போது பாலா – சூர்யா இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சூர்யா படப்பிடிப்பின் பாதியில் சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த விஷயத்தை இருவருமே மறுத்தனர்.

இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பு கோவாவில் இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் இன்று வரை தொடங்காத நிலையில் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவிற்கு பதிலாக புதுச்சேரியில் நடக்கவிருப்பதாகவும், ஜூலை 15-ஆம் இந்த படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!