கல்குவாரியில் சிக்கியவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழு

திருநெல்வேலி: தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடும் பணி… திருநெல்வேலி அருகே பாறை சரிந்து விழுந்த கல்குவாரியில், கற்குவியலில் சிக்கி உள்ளோரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், தருவை அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் காங்., மாநில துணைத் தலைவர் செல்வராஜ் நடத்தி வரும் கிரஷர் அருகே உள்ள குவாரியில், கடந்த 14ம் தேதி இரவில் குண்டுக்கல் ஏற்றும் பணி நடந்தது.அங்கு, 300 அடி ஆழமுள்ள குவாரியில், மூன்று இயந்திரங்கள், இரண்டு லாரிகளில் ஆறு பேர் கற்களை ஏற்றினர்.
திருநெல்வேலி காங்., கட்சி அலுவலக வளாகத்தில், காமராஜர், இந்திரா வெண்கல சிலைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக காங்., தலைவர் அழகிரி மற்றும் தி.மு.க., – எம்.பி., கனிமொழி, காங்., – எம்.பி., விஜய் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அழகிரி கூறுகையில், ”கல்குவாரிகளை முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறிய கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டியுள்ளனர். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை துாக்கிலிட வேண்டும்,” என்றார்.