September 30, 2022

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்

லண்டன் : கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் பலப்பரிட்சை நடத்தினார்.

இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். பின்னர், சுதாரித்து ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு அரையிறுதியில் ஆட்டத்தில் ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோதவிருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர்பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!