December 10, 2022

இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும் பழங்கள் எது தெரியுமா?…

வாழைபழத்தின் நன்மைகள் 

ஒரு பழுத்த வாழைப்பழத்தில் 11 சதவிகிதம் பொட்டாசியம் உள்ளது. இது மனித உடலுக்கு வலுவான எலும்புகள் மற்றும் தசைகளை உற்பத்தி செய்கிறது.

தினமும் ஒரு பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பழுத்த வாழைப்பழத்தில் சரியான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி கோளாறுகளையும் தடுக்கலாம்.

பழுத்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவது, நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.

இது தவிர, பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவதால், உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வாழைபழத்தின் தீமைகள்… 

வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவு என்பது உண்மைதான், ஆனால் தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது எடை அதிகரிக்க வழிவகுக்கும். நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் குறைந்தது 105 கலோரிகள் உள்ளன.

அதேபோல், ஒரு ஆரஞ்சு பழத்தில் 62 கலோரிகளும், ஒரு கப் தர்பூசணியில் 45 கலோரிகளும் உள்ளன. எனவே குறைந்த கலோரி உள்ள பழங்களை சாப்பிட விரும்புபவர்கள் வாழைப்பழம் தவிர மற்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஒற்றைத் தலைவலி உடலில் உள்ள டைரமைன் என்ற சுரப்பியால் ஏற்படுகிறது. வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் இவை சுரக்கும். வாழைப்பழத்தைத் தவிர பாலாடைக்கட்டி, பால் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் டயமின் சுரக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!