August 17, 2022

ரூ.2 கோடி சம்பளம்ப்பா… யாருக்கு என்று தெரியுங்களா?

சென்னை: காத்துக் வாக்குல இரண்டு காதல் படத்திற்காக ரூ.2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ்சிவன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதன்பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் எனும் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி சற்று சரிவை சந்தித்த இயக்குனர் விக்னேஷ்சிவன் தற்போது மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார்.

மேலும், விரைவில் தனது காதலி நடிகை நயன்தாராவை திருமணம் செய்யவுள்ள விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!