November 29, 2022

சென்னை: குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம்.

தேவையானவை:

பிரெட் – 5 ஸ்லைஸ்கள்,
பால் – 1 கப்,
சர்க்கரை – 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் – 2 ட்ராப்ஸ்,
பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்டாய், சீரக மிட்டாய் – தேவைக்கு.

அலங்கரிக்க

விருப்பமான நட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை: பாலை காய்ச்சி ஆற விட்டு ஜாதிக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து வெனிலா எசென்ஸ் சேர்த்து அதை ஃப்ரீசரில் சின்னச் சின்ன கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்து எடுத்து அதை கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்.

4 மணி நேரம் கழித்து எடுத்து கிளாஸ் பவுலில் பிரெட் போட்டு அதன் மீது இந்த பால் ஐஸ்கிரீம் போட்டு, பிறகு பிரெட் மறுபடியும் ஐஸ்கிரீம் போட்டு மேலாக நட்ஸ், பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்டாய் வகைகள் போட்டு கிளறி தரவும். பிரெட் முழுவதும் டேஸ்ட் இறங்கி சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!