November 29, 2022

நான் முதல்-மந்திரியாக வரவேண்டும் என சிவசேனா தலைமையை எதிர்க்கவில்லை – ஏக்நாத் ஷிண்டே

மும்பை : மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உள்கட்சி பிளவின் காரணமாக மகா விகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின்துணையுடன், சிவசேனா அதிருப்தி அணியினர் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியானார்.

இந்நிலையில் தானே மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேட்டி அளித்தபோது, என்னை முதல்-மந்திரி ஆக்கியதன் மூலமாக பாஜக மூத்த தலைவர்கள் பெரிய மனதை நிரூபித்துள்ளனர். பாஜக எப்போதும் ஆட்சியை அபகரிக்க அலைவதில்லை. மகாராஷ்டிரா மக்கள் 2019-ம் ஆண்டு பா.ஜனதா, சிவசேனா கூட்டணிக்கு தெளிவாக ஆட்சி அமைக்க அதிகாரம் வழங்கினர். ஆனால் பின்னர் நிலைமை சரியான திசையில் செல்லவில்லை. உத்தவ் தாக்கரேவிடம் இதுகுறித்து நான் பலமுறை விளக்கினேன். ஆனால் எல்லாம் வீணானது.

நான் முதல்-மந்திரியாக வரவேண்டும் என்பதற்காக சிவசேனா தலைமையை எதிர்க்கவில்லை. மக்கள் எனக்கு கொடுத்த அன்பும், பாசமும் தான் சிவசேனா தலைமைக்கு எதிரான செயல்பாட்டுக்கு பிறகு நான் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலாகும். அநீதிக்கு எதிராக போராடுவதற்கு சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே ஆகியோரின் போதனைகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!