September 27, 2022

ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை காலாவதியாகிறது

கொழும்பு : இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்பட அரசு கட்டிடங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள், அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த போராட்டம் காரணமாக, ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார்.

இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதனையடுத்து, இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார். மேலும் அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது. அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் அலுவலகம் தரப்பில் கூறுகையில், நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நீட்டிக்கப்படமாட்டாது. இந்த வாரத்தில் அவசர கால சட்டம் காலாவதி யாகும் நிலையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!