October 2, 2022

உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பதிலடி வந்தது இல்லை – பிரதமர் மோடி

டெல்லி : நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் ஆன வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள சூழலில், அவருக்கு இன்று நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மேலவையில் பிரதமர் மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பற்றி இன்று பேசுகையில், உங்களது ஒரு வரி பேச்சுகள் நகைக்சுவை நிறைந்த வரிகள். அவை வெற்றிக்கான வரிகளும் கூட. அதற்கு பிறகு எதுவும் பேச வேண்டியதில்லை என்பதே அதன் பொருள். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்கப்பட்டன. விரும்பப்பட்டன. உயர்வாக மதிக்கப்பட்டன. ஆனால், ஒருபோதும் அதற்கு பதிலடி வந்தது இல்லை என்ற் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், உங்களது வெவ்வேறு பணிகளின் செயல்பாடுகளையும் உற்று நோக்கி கவனித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவற்றில் சில செயல்பாடுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்றிய அதிர்ஷ்டமும் எனக்கு கிடைத்தது. உங்களது அனைத்து செயல்பாடுகளிலும் நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய விசயங்களை நான் பார்த்துள்ளேன். ஒவ்வொரு பணியிலும் ஒரு புதிய வாழ்க்கைக்கான உயிர்மூச்சு கொடுக்க முயன்றவர் நீங்கள் என புகழாரம் சூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!