இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என நிபுணர்கள் கணிப்பு

புதுடில்லி: விலை உயரும் அபாயம்…இந்தியாவில் தொடர்ந்து கடந்த 105 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.
தமிழகத்தில் நகர்புற ஊராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 117 இடங்களுக்கு வாக்கு பதிவு நடந்து வருகிறது. உத்தரபிரதேஷத்திலும் இன்று 3ம் கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயராமல் நிலையானதாக இருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை சுமார் 15 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 69 டாலர்களாக இருந்தது. பின்னர், ஒரு பீப்பாய்க்கு 24 டாலர்கள் விலை உயர்ந்தது. பீப்பாய் எண்ணெய் இந்தளவுக்கு விலை உயராமல் இருந்த போதே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், 24 டாலர்கள் ஒரு பீப்பாய்க்கு உயர்த்தப்பட்டும், இந்தியாவில் தேர்தல் காரணமாகவே பெட்ரோல், டீசல் உயர்த்தப்படவில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
அதனால், எதிர்காலத்தில், ரஷ்யா, உக்ரைன் பிரச்சனையினாலும் பீப்பாய் விலை உயர அதிகளவில் வாய்ப்பிருக்கிறது. வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.15 வரை உயர வாய்ப்புள்ளது என கணித்திருக்கிறார்கள் நிபுணர்கள்.