May 21, 2022

போலி செய்திகள் மறுக்கப்பட வேண்டும் – போப் ஆண்டவர் பிரான்சிஸ்

ரோம் : கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதுவரை, உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்று மட்டுமே தற்போது தீர்வாக உள்ளதால், பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிராக வலிமையான பேராயுதங்களாக உள்ள தடுப்பூசிகள் பற்றி தவறான தகவல்களை உலகளவில் பரப்பப்பட்டு கொண்டே வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்று நோய் தொடர்பான தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு உண்மை சரிபார்ப்பு வலையமைப்பை கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சந்தித்தார்.

அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்களில் தொற்று நோய்க்கு கூடுதலாக ‘இன்போடெமிக்’ பரவி வருகிறது. இதை பார்க்க தவறி விட முடியாது. ஆனால் பயத்தின் அடிப்படையில் யதார்த்தத்தை சிதைப்பது, உலகளாவிய சமூகத்தில் பொய்யான தகவல்கள் வெடிப்புக்கு வழிவகுக்கிறது. போலி செய்திகள் மறுக்கப்பட வேண்டும். ஆனால் தனிப்பட்ட நபர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!