September 30, 2022

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சாம்பியன் பட்டம் பெற்ற கஜகஸ்தான் வீராங்கனை

லண்டன் : லண்டனில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இந்த ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை ஒன்ஸ் ஜபீர் கைப்பற்றினார். பின்னர், சுதாரித்துக் கொண்ட எலினா ரிபாகினா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் எலினா ரிபாகினா, சாம்பியன் பட்டம் வென்றார். இது எலினா ரிபாகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் ஆகும். முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற எலினா ரிபாகினாவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!