ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் .சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார் ….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வந்த நிலையில். அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்.
நீலகிரி, தர்மபுரியில் வசிக்கும் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் பிரதான உணவு கேழ்வரகு. நீலகிரி, தர்மபுரியில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர்.இந்த பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும்.
இவர்கள் அரிசிக்கு பதில் கேழ்வரகு தந்தால் ஊட்டச்சத்து உணவு கிடைப்பதுடன் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் மாறுபடும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினி மயமாக்கப்படும் ஏறும் அவர்கூறினார்
சமீபத்தில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் தரமில்லை என புகார் வந்ததை அடுத்து, இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படும் என்றும் குடும்ப அட்டை வேண்டியவர்கள் அவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என்றார்.