களமிறக்காதது ஏன்? கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

மும்பை: ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுத்த வீரர் டிம் டேவிட்டை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்காதது உண்மையில் அதிர்ச்சியினையே ஏற்படுத்தி உள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம்ஜாபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15 வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இதுவரை 23 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
நேற்று முன்தினம் 23 வது லீக் ஆட்டமானது நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் கண்டன. பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றியினைப் பதிவு செய்தது.
மும்பை அணி இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சாடியுள்ளார். வாசிம் ஜாபர் தன் ட்விட்டரில், “ரூ. 8.5 கோடி ரூபாய் கொடுத்து ஒரு வீரரை வாங்கினால் அவர் நிச்சயம் 2 போட்டிகளுக்கும் மேலாக விளையாடும் திறமை கொண்டு இருப்பார்.
டிம் டேவிட்டை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்காதது உண்மையில் அதிர்ச்சியினையே ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார். டிம் டேவிட் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்கான சீசனில் மும்பை அணி ரூ. 8.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.