August 12, 2022

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடம்

இஸ்லாமாபாத்:  உடல்நிலை கவனம்… பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடும்பத்தினர் தரப்பில் கூறும்போது, ‘பர்வேஸ் முஷாரப் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது நோயின் (அமிலாய்டோசிஸ்) தீவிரத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீள்வது சாத்தியமில்லாமல் இருக்கிறது. உடல் உறுப்புகள் செயலிக்கும் தருணத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் பர்வேஸ் முஷரஃப் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டு பின்னர் நீக்கின. தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை எதிர்த்து முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் முஷாரப் உடல் நிலை மோசமாகி தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!