April 20, 2024

விரைவில் வெளியாகும் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்

சினிமா: விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக எதிர்நீச்சல், இறுதிச்சுற்று, சார்பட்டா பரம்பரை என அந்தப் பட்டியல் மிக நீளம். குறிப்பாக மகேந்திர சிங் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் 1983ல் கபில்தேவின் உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட 83 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடித்துள்ளார். ஆனால் இப்படம் ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பவர் கங்குலி. இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் கோப்பையை இந்தியா வெல்ல கங்குலி தனது டி-சர்ட்டை கழற்றி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை லவ் ரஞ்சன் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க ரன்பீர் கபூரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!