December 8, 2022

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61.95 கோடியாக அதிகரிப்பு

வாஷிங்டன் : சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 95 லட்சத்து 42 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 56 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 59 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரத்து 959 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 38 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!