September 27, 2022

அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதலே உயர்த்தி வழங்கப்படும். இதனை அடுத்து இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரித்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, மிக கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு என அனைவருக்கும் 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

எனவே இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதனை அடுத்து இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!