May 21, 2022

ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு

டெகுசிகல்பா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்றார்.

ஹோண்டுராஸ் நாட்டின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அதிபராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பேசிய காஸ்ட்ரோ, தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் தங்கள் முதுகுக்குப் பின்னால் வாங்கிய கடனை அடைக்கும் சுழலை எனது அரசாங்கம் தொடராது என்று கூறினார்.

மேலும் அவர், வெளிப்படைத்தன்மை, செயல்திறன், உற்பத்தி, சமூக நீதி, செல்வப் பகிர்வு மற்றும் தேசிய வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரத் துறையை மீட்டெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!