September 27, 2022

கேரட் கீர் செய்ய தேவையான பொருட்கள் : கேரட் – 3, பாதாம் பவுடர் – 1 1/2 மேசைக்கரண்டி, பால் – அரை கப், பாதாம் பருப்பு – 10, சர்க்கரை – கால் கப் + 2 மேசைக்கரண்டி, உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை : முதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும். கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக்க கேரட் கீர் தயார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!