எளிய முறையில் முட்டை ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி ?

முட்டை ஃப்ரைடு ரைஸ் செய்ய செய்ய தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப், வெங்காயம் – 2, கேரட் – 1, பீன்ஸ் – 50 கிராம், வெங்காயத்தாள் – 1, குடை மிளகாய் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி, முட்டை – 3, சில்லி சாஸ் – 1 மேஜை கரண்டி, சோயா சாஸ் – 1 மேசைக் கரண்டி, மிளகு தூள் -1 மேஜை கரண்டி, நெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு
செய்முறை : முதலில் வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.சாதம் உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொரித்து கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் பாதி வெங்காயத் தாளை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் கேரட், பீன்ஸ் சேர்த்து கலர் மாறாமல் வதக்க வேண்டும். அடுத்து அதில் குடைமிளகாயை போட்டு வதக்க வேண்டும். அனைத்தும் வெந்ததும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும். காய்கள் நன்றாக வெந்த பின் ஆற வைத்த சாதம், பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்க சுவையான முட்டை ஃப்ரைடு ரைஸ் தயார்.