சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் செய்வது எப்படி ?

பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் செய்ய தேவையான பொருட்கள் : பேபி கார்ன் – 4, ப்ரோக்கோலி – சிறியது 1, எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,பச்சை மிளகாய் – 1, வெள்ளை மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு
செய்முறை : முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பேபி கார்ன், ப்ரோக்கோலியை துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் போட்டு வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து இரண்டையும் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி கார்ன், ப்ரோக்கோலியை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாற சுவையான, சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் தயார்.