கடலைப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி ?

கடலைப்பருப்பு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1 கப், துருவிய வெல்லம் – 1½ கப், பல்லு பல்லாகக் கீறிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரித்துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : வெறும் வாணலியில் கடலைப்பருப்பை லேசாக வறுக்க வேண்டும். வறுத்த கடலைப்பருப்பை குக்கரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி ரொம்பவும் குழையாமலும் உதிர் உதிராக இல்லாமலும் வேக விட்டு எடுக்க வேண்டும்.
வெந்த பருப்பில் வெல்லத்தினைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லமும், பருப்பும் ஒன்றாகச் சேர்ந்ததும் வாணலியில் நெய் ஊற்றி தேங்காய், முந்திரியை வறுத்துக் கொதிக்கும் பாயாசத்தில் சேர்த்து ஏலப்பொடி தூவி இறக்க சுவையான கடலைப்பருப்பு பாயாசம் தயார்.