August 16, 2022

நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளட்டும் – ரஷிய அதிபர்

மாட்ரிட் : நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடு ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது.

இதனையடுத்து, நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு முறைப்படி அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறுகையில், நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவது பற்றி ரஷியா கவலை கொள்ளவில்லை. அவர்கள் சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளட்டும். ஆனால், ஒன்றை தெளிவாகவும், சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்வரை அந்த பகுதிகளில் இருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஒருவேளை, அந்த பகுதிகளில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ அல்லது ராணுவ உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலோ, எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டால், அதற்கு எங்கள் தரப்பில் இருந்து பதிலடி தரப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!