October 5, 2022

கர்நாடகத்தில் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆட்சி நிர்வாகம் நடக்கிறது – சுகாதாரத்துறை மந்திரி

பெங்களூரு : மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் அமைச்சகம் சார்பில் நல்லாட்சி நிர்வாகத்திற்காக பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசை ஒன்றாக ஏற்படுத்துவது குறித்த மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசுகையில், நல்லாட்சி என்றால், சாமானிய மக்களின் தேவை என்ன, அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது தான். கர்நாடகத்தில் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆட்சி நிர்வாகம் நடத்தப்படுகிறது. தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

நாட்டில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் மட்டும் 13 ஆயிரம் நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. அதனால் இங்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆராய்ச்சி முதல் அனைத்து துறைகளிலும் மனித வளம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!